ஸ்ரீமதியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை நகலை பெற்றோர் பெற்றுக் கொள்ளலாம் - விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு

0 7992
கோத்தகிரியில் மீண்டும் தென்படும் இருவாட்சி பறவைகள்

ஜிப்மர் மருத்துவக்குழு சமர்ப்பித்த மாணவி ஸ்ரீமதியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை நகலை இன்று பெற்றோர் பெற்றுக் கொள்ளலாம் என விழுப்புரம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ரீமதியின் இரு பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழு, அதன் அறிக்கையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்நிலையில், ஜிப்மர் குழுவின் அறிக்கை நகலை தங்களுக்கு வழங்கக்கோரி ஸ்ரீமதியின் தாய் செல்வி விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து, இன்று நகலை பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments