அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் தீ விபத்து-புகை சூழ்ந்ததால் மூதாட்டி, இளம்பெண் மூச்சுத்திணறி பலி

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தின்போது புகை சூழ்ந்ததால் ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருந்த அறையில் உறங்கிய இளம்பெண்ணும், மூதாட்டியும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
அசோக் நகரில் உள்ள குடியிருப்பில், 92 வயதான ஜானகி, அவரது மகள் ஜெயா மற்றும் ஜானகியை கவனிக்க ஹோம் நர்சாக ஜெய பிரியா ஆகியோர் தங்கியிருந்தனர். மூதாட்டி, ஜெய பிரியா ஒரே அறையிலும், ஹாலில் ஜெயாவும் உறங்கியதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் வீட்டிலிருந்த பிரிட்ஜில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், புகை வெளியேறி வீடு முழுவதும் சூழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அறையில் உறங்கியவர்களை ஜெயா எழுப்ப முயன்று மயக்கமுற்ற நிலையில், மூதாட்டி அறையில் இருந்து வெளியேறி ஹாலிலும், உறங்கிய நிலையில் ஜெய பிரியாவும் மயங்கியதாக சொல்லப்படுகிறது.
பின்னர், மூவரும் மீட்கப்பட்ட நிலையில், ஜெயப் பிரியா உறக்கத்திலும், மூதாட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்ததாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
Comments