நோபல் பரிசு பெற்றவர்கள்தான் ஆள வேண்டுமா? - பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வினா

0 2227

நோபல் பரிசு பெற்றவர்தான் நாட்டை ஆள வேண்டுமா என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வினவியுள்ளார்.

இலவசத் திட்டங்கள் குறித்த தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நீங்கள் நிதிசார் வல்லுநரா? நோபல் பரிசு பெற்றவரா? எங்களைவிடச் சிறப்பாகச் செயல்படுகிறீர்களா? ஒன்றுமே இல்லாதபோது எந்த அடிப்படையில் உங்களுக்காக எங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என வினவியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், இன்று கோவையில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நோபல் பரிசு பெற்றவர்கள்தான் நாட்டை ஆள வேண்டும் எனக் கூறும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக முதலமைச்சரையும் விமர்சிக்கிறாரா? என வினவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments