ரயில் மூலம் கடத்தப்பட்ட ஒரு கிலோ தங்கம், ரூ.37.43 லட்சம் பணம் பறிமுதல்.!

ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட சுமார் ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் 37 லட்சம் ரூபாய் ரொக்கத்தை அரக்கோணம் ரயில் நிலையத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் ரயில் அதிகாலை 1ம் நடைமேடைக்கு வந்து நின்றது. அதில், தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா என போலீசார் சோதனை மேற்கொண்ட போது, கோவையைச் சேர்ந்த நாகராஜ் என்ற பயணி உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ஒரு கிலோ 357 கிராம் தங்கமும் 37 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து நுங்கம்பாக்கம் வருமான வரித்துறைக்கு தகவல் அளித்த ரயில்வே போலீசார், தங்கம் மற்றும் பணம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? கடத்தல் தங்கமா? ஹவாலா பணமா? என விசாரனை நடத்தி வருகின்றனர்.
Comments