தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்.. உறியடி திருவிழா-வழுக்கு மரம் ஏறுதலில் திரளானோர் பங்கேற்பு..!

தமிழகம் முழுவதும் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு உறியடி திருவிழா மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் யதுகுல வேணுகோபால பஜனை மந்திரத்தில் நடைபெற்ற வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி கோவிந்தன்பட்டியில் பாமா- ருக்மணி சமேத கோவிந்த சுவாமி கோவிலில் கிருஷ்ணா ஜெயந்தி உற்சவர் ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.
கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கோபாலசுவாமி திருக்கோவிலில் உறியடி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
கரூரில் பண்டரிநாதன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நூறாவது ஆண்டாக வழுக்கு மரம் ஏறுதல், உறியடி நடைபெற்றது.
கடலூர்மாவட்டம் விருத்தாச்சலத்தில் அமைந்துள்ள ராஜகோபாலசுவாமி கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு உரியடி திருவிழா மற்றும் வழுக்குமரம் ஏறுதல் நடைபெற்றது.
காரைக்கால் அடுத்த திருப்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற உறியடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments