சொகுசு காரில் சைரன் பொருத்தி ஓட்டிச் சென்ற கர்நாடக முன்னாள் எம்.பி மருமகனுக்கு ரூ.28,000 அபராதம்..!

சொகுசு காரில் சைரன் பொருத்தி ஓட்டிச் சென்ற கர்நாடக முன்னாள் எம்.பி மருமகனுக்கு ரூ.28,000 அபராதம்..!
கர்நாடகாவில், சொகுசு காரில் சைரனை பொருத்தி அதிவேகமாக ஓட்டிச் சென்ற முன்னாள் எம்.பியின் மருமகனுக்கு 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் எம்.பி எல்.ஆர்.சிவராமேகவுடாவின் மருமகனும் நடிகருமான ராஜீவ் ரத்தோட், தனது ஆடி சொகுசு காரில் சைரன் பொருத்தி அதனை ஒலிக்கவிட்டவாறு, பெங்களூரு விஜயநகரில் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதனை வீடியோ எடுத்ததோடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து காரை பின் தொடர்ந்து சென்று வழிமறித்து பிடித்த போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிமீறலுக்காக ராஜீவ் ரத்தோட் மீது வழக்குப்பதிவு செய்து 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
Comments