முதன்முறையாக பெங்களூரில் தரையிறங்குகிறது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் A380

0 46930

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் A380 சூப்பர் ஜம்போ ஜெட் விமானம் முதன்முறையாக வருகிற அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயின் எமிரேட்ஸ் விமான நிறுவனம் முதன்முறையாக துபாயில் இருந்து பெங்களுருக்கு நேரடியாக இந்த விமானத்தை இயக்கவுள்ளது. தென் இந்திய மாநிலங்களில் இந்த சூப்பர் ஜம்போ ஜெட் விமானம் தரையிரங்குவதும் இதுவே முதன்முறையாகும்.

அளவில் மிகப்பெரியதும், சக்தி வாய்ந்த இன்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த A380 விமானம் தரையிரங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பெங்களூர் கெம்பகௌடா சர்வதேச விமானநிலையம் செய்து வருகிறது.

குறிப்பாக இந்த ராட்சத விமானம் தரையிரங்க நீண்ட ஓடுபாதை தேவைப்படும் என்பதால், இதற்காக பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments