தனியார் பள்ளி வாகனம் மோதி தாய் கண்முன்னே ஒன்றரை வயது குழந்தை உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு

0 2855
தனியார் பள்ளி வாகனம் மோதி தாய் கண்முன்னே ஒன்றரை வயது குழந்தை உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி தாய் கண்முன்னே ஒன்றரை வயது குழந்தை உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லத்துவாடி கிராமத்தை சேர்ந்த காசி- சுதா தம்பதிக்கு 4 வயது மற்றும் 1.5 வயதில் 2 மகள்கள் உள்ள நிலையில், இன்று காலை வழக்கம் போல், சுதா தனது 4 வயது மகள் வேதா ஸ்ரீயை பள்ளி வாகனத்தில் ஏற்றி விட சென்றுள்ளார்.

அப்போது தாயை பின் தொடர்ந்து வந்த 1.5 வயது குழந்தை பவானிகாஸ்ரீ பள்ளி வாகனத்தின் முன்பக்கம் சென்றதாக கூறப்படுகிறது. இதனை சுதா கவனிக்காத நிலையில், ஓட்டுநர் பள்ளி வாகனத்தை இயக்கியதில், முன்பக்க சக்கரத்தில் சிக்கிய குழந்தை உடல் நசுங்கி உயிரிழந்தது.

தாய் கண்முன்னே குழந்தை உயிரிழந்த நிலையில், தாய் கதறி அழுதார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments