நட்பு நாடுகளுக்கு அதி நவீன ஆயுதங்களை வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாக அதிபர் புதின் அறிவிப்பு!

நட்பு நாடுகளுக்கு அதி நவீன ஆயுதங்களை வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாக அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
மாஸ்கோ அருகில் ஆயுதக் கண்காட்சி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய புதின், வெளிநாடுகளுக்கு ரஷ்யா மிக அதி நவீன ஆயுதங்களை வழங்கத் தயார் என்றார்.
உக்ரைனில் ரஷ்யா எடுத்துவரும் ராணுவ நடவடிக்கையை பாராட்டிய அவர், இக்கட்டான நேரத்தில் துணை நின்ற நட்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார். லத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா உள்பட வெவ்வேறு கண்டங்களில் இருந்து பல நாடுகள் ரஷ்யாவுக்குத் துணை நிற்பதாக புதின் கூறினார்.
Comments