75ஆவது சுதந்திர நாள் விழா.. தேசியக் கொடியேற்றி மரியாதை.!

0 2253

75ஆவது சுதந்திர நாளையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிவைத்துப் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

75ஆவது சுதந்திர நாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடியைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் அஜய் பட் ஆகியோர் வரவேற்றனர்.

செங்கோட்டையில் மத்தியப் படையினர் மற்றும் காவல்படையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்ட பிரதமர், வீரர்கள் மரியாதை செலுத்தியதை ஏற்றுக்கொண்டார்.

டெல்லி செங்கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து வணங்கிப் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 

விமானப்படை ஹெலிகாப்டரில் வானில் இருந்து வண்ணப்பொடி தூவப்பட்டது.  21 பீரங்கிக் குண்டுகள் முழங்கித் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments