ஷங்கர் மகளால் தூக்கி எறியப்பட்ட சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி...! வாய்ஸ் சரியில்லையாம்..!

0 24448
ஷங்கர் மகளால் தூக்கி எறியப்பட்ட சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி...! வாய்ஸ் சரியில்லையாம்..!

விருமன் படத்தில் இருந்து சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பாடிய பாடலை தூக்கி வீசி உள்ளார் யுவன்சங்கர் ராஜா. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளுக்காக , ராஜலெட்சுமியின் பாடல் நீக்கப்பட்டதாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சூப்பர் சிங்கர் மூலம் கிடைத்த புகழால் கிராமிய பாடகி ராஜலெட்சுமி, தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், முதல் பாடலே ஹிட் அடித்ததால் மிகவும் பிஸியான பாடகரானார் ராஜலெட்சுமி. கணவர் செந்தில் கணேஷ் உடன் இணைந்து உள்ளூர் மற்றும் வெளி நாடுகளுக்கு எல்லாம் சென்று கிராமிய கச்சேரிகளில் பாடிவந்தார். புஷ்பா படத்தில் ராஜலெட்சுமி பாடிய அய்யா சாமி ... பாடல் மெகா ஹிட் அடித்தது

அதே டெம்ப்ளட்டில் விருமன் படத்தில் இடம் பெற்ற மதுர வீரன் பாடலை ராஜலெட்சுமி பாடிஇருந்தார் . அவருக்கு பாடல் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பு வராத நிலையில், அதே மதுர வீரன் பாடல் மேடையில் ஷங்கரின் மகள் அதிதியின் குரலில் வெளியானது

யுவன் சங்கருடன் , அதிதி ஷங்கர் பாடிய அந்த பாடல் ஹிட் அடித்த நிலையில், தனது குரலில் பதிவு செய்யப்பட்ட மதுரவீரன் பாடல் என்னவானது என்று தெரியாமல் கண்ணீர் விட்டு கலங்கும் நிலைக்கு கிராமிய பாடகி ராஜலெட்சுமி தள்ளப்பட்டார்.

இது தொடர்பாக விசாரித்த போது, ராஜலட்சுமியின் குரல் கனீர் குரலாக இருப்பதால் யுவன் குரலுடன் ஒலிக்கும் போது யுவன் குரல் டம்மியாவதை உணர்ந்துள்ளார். அதே நேரத்தில் படத்தின் நாயகி பாடிய பாடல் என்றால் கூடுதல் கவனம் பெறும் என்பதால் அதிதிஷங்கரை பாட வைத்ததாக கூறப்படுகின்றது.

பாடகரை மாற்றுவது, இசையமைப்பாளரை மாற்றுவது சினிமாவில் சகஜமான ஒன்று என்று சுட்டிக்காட்டும் திரை உலகினர் , பாலச்சந்தரின் புது புது அர்த்தங்கள் படத்துக்கு ஹிட் பாடல்களை இளையராஜா கொடுத்தாலும், அந்த படத்துக்கு பின்னணி இசை அமைக்கும் வாய்ப்பு மரகத மணிக்கு கொடுக்கப்பட்டதாகவும்.

அஜீத்தின் வலிமை படத்தில் யுவன்சங்கர ராஜா அமைத்த பின்னனி இசை சரியில்லை என்று பின்னனி இசை அமைக்கும் வாய்ப்பு இசை அமைப்பாளர் ஜிப்ரான் கைக்கு சென்றதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

வறுமையையும், ஏமாற்றத்தையும், தடைகளையும் தாண்டி திரை இசையில் தடம் பதித்த ராஜலெட்சுமியின் குரல் சரியான இடத்தில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்றும் அதனை எந்த சிபாரிசும் முடக்கிவிட முடியாது என்பதே அவரது ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments