போலி நீதிமன்ற பிடிவாரண்டை காட்டி நூல்மில் உரிமையாளரை கடத்த முயற்சி.. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது..!

0 2771
போலி நீதிமன்ற பிடிவாரண்டை காட்டி நூல்மில் உரிமையாளரை கடத்த முயற்சி.. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது..!

போலி நீதிமன்ற பிடி வாரண்டை காண்பித்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த தொழிலதிபரை கடத்தி பணம்பறிக்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அம்மாபாளையத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கும், ஆந்திரமாநிலம் சிலுக்குறிபேட்டையை சேர்ந்த தம்ம நாயுடு என்பவருக்கும் நூல் வியாபாரம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போலி பிடிவாரண்ட்டை காண்பித்து தமிழ்ச்செல்வனை கடத்த முயன்ற கும்பல் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் 3 பேர் மடக்கி பிடிக்கப்பட்டனர்.

தப்பியோடிய ஆந்திர மாநில காவலர் கோபி, ஆந்திரா நூல்மில் உரிமையாளர் தம்ம நாயுடு மற்றும் மேலாளர் சத்திய நாராயண ராவ் ஆகிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments