டெல்லி விமான நிலையத்தில் பேருந்து வராததால் முனையம் நோக்கி நடந்த பயணிகள்.. விசாரணைக்கு உத்தரவு!

0 2257

டெல்லி விமான நிலையத்தில் பேருந்து வராததால், டார்மாக் எனப்படும் தார்சாலை பகுதியில் பயணிகள் நடந்து சென்றது தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

நேற்று இரவு ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானம் ஒன்று ஐதராபாத்தில் இருந்து 186 பயணிகளுடன் டெல்லியில் தரையிறங்கியது. அதில் இருந்தவர்களை முனையத்திற்கு அழைத்துச் செல்ல விமான நிறுவனத்தின் ஒரு பேருந்து மட்டும் வந்ததாக கூறப்படுகிறது.

அதில் சிலர் ஏறிச்சென்ற நிலையில், எஞ்சியவர்களை அழைத்துச் செல்ல 45 நிமிடங்களுக்கு மேல் பேருந்து வராததால், அவர்கள் டார்மாக் பகுதியில் சிறிது தூரம் நடந்து சென்றதாக சொல்லப்படுகிறது. பின்னர், அவர்களை பேருந்து ஏற்றிச் சென்று முனையத்தில் இறக்கிவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments