அரசு நிலத்தை வீட்டுமனைகளாகப் பிரித்து விற்பனை.. ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு உதவிய அரசு அதிகாரிகள் 5 பேர் கைது.!

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தை சட்டவிரோதமாக வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு உதவிய அரசு அதிகாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடகால், பால்நல்லூர் ஆகிய கிராமங்களில் அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட 16-ஏக்கர் நிலத்தை வீட்டு மனைகளாகப் பிரித்து ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வருவதாகப் புகார்கள் எழுந்தன.
விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், இதற்கு உடந்தையாக இருந்த சார்பதிவாளர் ராஜதுரை, இந்து சமய அறநிலையத் துறை டி.ஆர்.ஓ ராஜேந்திரன், அலுவல உதவியாளர் பெனடின், தாசில்தார்கள் எழில் வளவன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோரை கைது செய்தனர்.
Comments