படகு கவிழ்ந்து விபத்து : நடுக்கடலில் மாயமான 2 பேரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்க கோரிக்கை..!

0 560
படகு கவிழ்ந்து விபத்து : நடுக்கடலில் மாயமான 2 பேரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்க கோரிக்கை..!

திருச்செந்தூர் அருகே ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் படகு காற்றின் வேகத்தில் சிக்கி கவிழ்ந்த விபத்தில், மாயமான 2 மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற அமலி நகரை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், பால்ராஜ், அஸ்வின், நித்தியானந்தம் ஆகியோரின் படகு பலத்த காற்றின் காரணமாக கடலில் கவிழ்ந்தது.

கடலில் தத்தளித்து கொண்டிருந்த பால்ராஜ், நித்தியானந்தம் ஆகியோரை மற்ற படகில் சென்ற மீனவர்கள் காப்பாற்றிய நிலையில், அஸ்வின், பிரசாத் ஆகிய இருவரும் மாயமானர்.

இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஹெலிகாப்டர் உதவியுடன் இருவரையும் மீட்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரியிடம் மீனவர்கள் மனு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments