பெண்ணை ஏமாற்றிய குற்றத்திற்காக விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் சஸ்பெண்ட்

பெண்ணை ஏமாற்றிய குற்றத்திற்காக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணை ஏமாற்றிய குற்றத்திற்காக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
52 வயதான இவர் மதுரை ஒத்தக்கடையில் பணியாற்றிய போது திருமணமான கோமதி என்ற 42 வயதுபெண்ணுடன் பழகியதாவும், இருவரும் சில மாதங்கள் இணைந்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
கோமதியிடமிருந்து 6 லட்சம் ரூபாய் பணம் பெற்ற நிலையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவத்தை நம்பி தாம் வாழ்க்கையையும், பணத்தையும் இழந்து தவிப்பதாக கோமதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் குற்றச்சாட்டு ஊர்ஜிதமானதால் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Comments