அந்தியூர் எம்.எல்.ஏ வெங்கடாசலம் சென்ற கார் நள்ளிரவில் கவிழ்ந்து விபத்து.. விலா எலும்பில் விரிசல் என மருத்துவர்கள் தகவல்..!

0 3337
அந்தியூர் எம்.எல்.ஏ வெங்கடாசலம் சென்ற கார் நள்ளிரவில் கவிழ்ந்து விபத்து.. விலா எலும்பில் விரிசல் என மருத்துவர்கள் தகவல்..!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, நள்ளிரவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி வெங்கடாசலம் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சென்னை செல்வதற்காக திமுக எம்.எல்.ஏ வெங்கடாசலம், நேற்றிரவு காரில் தனது ஓட்டுநர் கார்த்தியுடன் ஈரோடு ரயில் நிலையம் நோக்கி சென்றுள்ளார்.

பவானி அருகே வந்த போது மழை பெய்துக் கொண்டிருந்த நிலையில், வாய்க்கால் பாளையம் என்ற இடத்தில் உள்ள வளைவில், சாலையில் தண்ணீர் தேங்கி இருந்ததால், கார் குழிக்குள் சிக்காமல் இருக்க ஓட்டுநர் பிரேக் அடித்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ வெங்கடாச்சலத்திற்கு, விலா எலும்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments