சபரிமலை கோவில் மேற்புரத் தங்கத் தகடுகளில் கசிவு

சபரிமலை கோவிலின் மேற்புரத்தில் வேயப்பட்டுள்ள தங்கத் தகடுகளில் ஏற்பட்டுள்ள கசிவு விரைவில் சரி செய்யப்படும் என்று திருவாதங்கூர் தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.
இந்த தகட்டில் கசிவு ஏற்பட்டுள்ளதை கணக்கிடுவதற்காக தங்க முலாம் பூசப்பட்ட மேற்கூரையின் ஒரு பகுதி அடுத்த மாதம் 3ந்தேதி அன்று திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கருவறையின் இடது மூலையில் காணப்படும் கசிவு பெரிய அளவில் இல்லை என்று தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Comments