இன்று மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்க உள்ளார் இசைஞானி இளையராஜா.!

0 2727

இசைஞானி இளையராஜா இன்று மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்க உள்ளார். இதற்காக நேற்று டெல்லி சென்ற இளையராஜாவுக்கு பாஜகவினரும் அவரது ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதும் புதிய எம்பிக்கள் பதவியேற்றனர். இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்ததால் அவரால் பதவி அன்று ஏற்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.

அவர் கடந்த 19-ம் தேதி சென்னை திரும்பினார் இந்நிலையில், இன்று மாநிலங்களவை எம்.பியாக இளையராஜா பதவி ஏற்கிறார். இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments