சாலையை கடக்க முயன்றபோது வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து.. 16 மாணவர்கள் பத்திரமாக மீட்பு!

0 1892

தெலுங்கானா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மஹபூபாபாத் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது.

கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், 16 மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து நரசிமுலாப்பேட் மண்டல் பகுதியில் எச்சரிக்கைகளை மீறி, வெள்ளத்தில் மூழ்கிய சாலையை கடக்க முயன்ற போது சிக்கிக் கொண்டது.

தொடர்ந்து, அப்பகுதியில் இருந்தவர்கள் பேருந்தில் இருந்த மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments