மதுரையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனம், செல்போன் திருடிய இளம் சிறார்கள் 6 பேர் கைது.!

0 10768

மதுரையில் பல்வேறு பகுதியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனம், செல்போன் திருடிய இளம் சிறார்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

காட்டு பிள்ளையார் கோவில் பகுதியில் இரவு நேரத்தில் அரிவாள், வாள் போன்ற ஆயுதத்துடன் ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக தல்லாகுளம் போலீசாருக்கு  தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்து தப்பி ஓடிய 6 இளஞ்சிறார்களை பிடித்தனர். அவர்களிடம் இருந்து  10 செல்போன்கள் மற்றும் 9 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments