ரஷ்ய அதிபர் புதின் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார் - அமெரிக்க புலனாய்வு அமைப்பு

0 907

ரஷ்ய அதிபர் புதின் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

அண்மை காலமாக புதினின் உடல்நிலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய வில்லியம் பர்ன்ஸ், ரஷ்ய அதிபர் குறித்து பல வதந்திகள் பரவியதாகவும், அவர் ஆரோக்கியமாக உள்ளதாகவே தெரிவதாகவும் கூறினார்.

இதனிடையே, புதினின் உடல் நிலை தொடர்பாக உக்ரைன், அமெரிக்கா, பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் போலியான தகவல்களை பரப்புவதாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments