குடியரசுத் தலைவர் தேர்தலில் அணி மாறி வாக்களித்த காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

0 981

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அணி மாறி வாக்களித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடும் நிலையில் குஜராத் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. கந்தல் எஸ். ஜடேஜா பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு வாக்களித்ததாக தெரிவித்துள்ளார்.

இதேபோல ஒடிசா காங்கிரஸ் எம்.எல்.ஏ. முகமது மோக்கிம், ஹரியானா காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னாய் ஆகியோரும் முர்முவுக்கு வாக்களித்ததாக கூறியுள்ளனர்.

அசாமில் 20க்கும் அதிகமான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முர்முவுக்கு வாக்களித்திருக்கலாம் என அகில இந்திய ஒருங்கிணைந்த ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ. கரிமுதீன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments