"மோடி மீது வழக்குப்பதிய ரூ.30 லட்சம்" - "காங். கட்சியிடமிருந்து பணம் பெற்றதாக டீஸ்டா செடல்வாட் மீது குற்றச்சாட்டு
2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக நரேந்திர மோடி மீது குற்றஞ்சாட்டுவதற்காகச் சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட், காவல்துறை அதிகாரிகள் ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோர் அகமது பட்டேலிடம் 30 இலட்ச ரூபாய் பெற்றதாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
குஜராத் கலவரத்தில் மோடிக்குத் தொடர்பில்லை எனச் சிறப்புப் புலனாய்வுக் குழு கூறியதை எதிர்த்து சாகியா ஜாப்ரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.
அந்த வழக்கை முன்னெடுக்கத் தீவிரமாகச் செயலாற்றிய தீஸ்டா செதல்வாட்டைக் குஜராத் காவல்துறையினர் கைது செய்தனர். தீஸ்தாவின் ஜாமீன் மனுவுக்குக் காவல்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் குஜராத் அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
Comments