தரைப்பாலம் இடிந்து வெள்ளத்தில் சிக்கிய நபரை கயிறு கட்டி மீட்ட கிராம மக்கள்.!

0 939

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தொடர் மழையால் தரைப்பாலம் இடிந்ததில், வெள்ள நீரில் சிக்கிய நபரை கிராம மக்கள் மீட்டனர்.

மங்கொலி பகுதியில் அதிக மழைநீர் வெள்ளம் புகுந்து தரைப்பாலம் இடிந்தது. அப்போது அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை கயிறு கட்டி கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர்.

இதனிடையே கனமழை காரணமாக கூடலூர் பெங்களூர் சாலையில் மரங்கள் விழுந்தன. கூடலூர் நாடுகாணி சாலையில் மூங்கில் மரங்களும் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments