டெல்லியில் பெய்த கன மழையால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல்.!

டெல்லியில் பெய்த கன மழையால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஐடிஓ சாலையில் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்ட நிலையில், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டனர். சரிதா விகார், கிருஷ்பவன் உள்ளிட்ட இடங்களிலும் கன மழை பெய்தது. இதனிடையே இன்று பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Comments