ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

0 1255

உத்தரபிரதேச மாநிலம் வாராணாசியில் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலர் ஒருவர் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலை பிடிப்பதற்காக பெண் பயணி ஒருவர் வேகமாக ஒடி சென்று ஏற முயன்றார். எதிர்பாராத விதமாக அந்த பயணியின் கால்கள் நடைமேடைக்கும் ரயிலுக்குமான இடைவெளிக்கு இடையே சிக்கியது.

அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் துரிதமாக செயல்பட்டு அந்த பயணியை பாதுகாப்பாக வெளியே இழுத்தார். இதனால், அதிர்ஷ்டவசமாக அந்த பயணி உயிர் தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments