எரிவாயு கசிவு காரணமாக பேக்கரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. சிலிண்டர் வெடிக்காமல் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..!

0 1445
எரிவாயு கசிவு காரணமாக பேக்கரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. சிலிண்டர் வெடிக்காமல் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..!

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே மேலத்தானியத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் எரிவாயு கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் பேக்கரி உரிமையாளர் செந்தில் மற்றும் ஊழியர் ஒருவரும் பலத்த தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடைக்குள் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. எனினும் சிலிண்டர் வெடிக்காமல் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

தகவல் அறிந்து சென்ற பொன்னமராவதி தீயணைப்புத்துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்த நிலையில் விபத்து குறித்து காரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments