அண்ணாத்த நடிகைக்கு ஆடையை கிழித்து உருட்டு கட்டை அடி.. அடாவடி மாமனார் மீது புகார்..!

0 6125

அண்ணாத்த உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள நடிகை ரஞ்சனா நாச்சியார், உருட்டு கட்டையால் தன்னை மாமனார் தாக்கி ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்தியதாக, வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்... 

சென்னை, போரூர் பகுதியில் வசித்து வருபவர் நடிகை ரஞ்சனா நாச்சியார். அண்ணாத்த, ராஜவம்சம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இவர் சினிமாவில் நடிப்பது அவரது மாமனார் சரவணவேல் மற்றும் மாமியாருக்கு உடன் பாடில்லை என்று கூறப்படுகின்றது.

இதன் காரணமாக இவர்களுக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று நடிகை ரஞ்சனாவுக்கும் அவரது மாமனார் சரவண வேலுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணவேலு வீட்டில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து நடிகை ரஞ்சனா நாச்சியாரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகின்றது.

தன்னை தாக்குவதற்கு மாமனார் உருட்டு கட்டை எடுத்து வருவதையும் அதன் தொடர்ச்சியாக அவர் கத்தி கூச்சலிடும் சத்தமும் அடங்கிய வீடியோ ஒன்றை ஆதாரமாக மாங்காடு காவல்துறையினரிடம், முகத்தில் பலத்த காயங்களுடன் ரஞ்சனா புகார் அளித்துள்ளார்.

தனது கணவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை மறைத்து தனக்கு திருமணம் செய்து வைத்து விட்டதாகவும், தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தனது மாமனாருக்கும், கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற தனது மாமியாருக்கும், தான் சினிமாவில் நடிப்பது பிடிக்காமல் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னை கட்டையால் சரமாரியாக தாக்கி, ஆடையை கிழித்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்

அதே நேரத்தில் நடிகையின் 15 வயது மகளிடம் மாமனார் சரவணவேல் அத்துமீறியதாக அளித்த மற்றொரு புகாரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் வீட்டில் இருந்து சரவணவேல் தலை மறைவாக இருப்பதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments