"அடுத்த 30-40 ஆண்டுகள் பாஜகவின் காலம் தான்" - பாஜக செயற்குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

0 793

அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலம் தான் என்றும் இந்தியா உலகிற்கே தலைமை தாங்கும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவின் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜகவின் செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தில் நம்பிக்கை வைத்து குஜராத் கலவர வழக்கின் விசாரணையை பிரதமர் மோடி எதிர்கொண்டதாகவும், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போது எதிர்க்கட்சிகள் அராஜகத்தை பரப்புவதாகவும் கூறினார்.

மேலும், தெலங்கானா போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டு வரும் என்றும் அமித்ஷா குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments