கிருஷ்ணகிரியில் கோழிப் பண்ணையில் பதுக்கி இருந்த 4 டன் குட்கா பறிமுதல்.!

0 1048

கிருஷ்ணகிரி மாவட்டம் கொண்டப்பநாயக்கன் பள்ளியில், கோழி பண்ணையில் பதுக்க வைத்திருந்த 27 லட்ச ரூபாய் மதிப்பிலான நான்கு டன் குட்கா போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலில், சதீஷ் என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் போலீசார் ரெய்டு சென்றனர்.

சரக்கு வாகனத்தில் இருந்து போதைப் பொருட்கள் மூட்டையை இறக்கி வைத்த தொழிலாளர்கள் போலீசாரை கண்டதும் அலறியடித்து ஓடினர். வாகன ஓட்டியை கைது செய்த போலீசார் தப்பியோடிய 15 பேரை தேடி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments