சென்னை புளியந்தோப்பில் ரவுடியை வெட்டிக் கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பல்... போலீஸ் வலைவீச்சு!

0 1285

சென்னை புளியந்தோப்பில் ரவுடியை வெட்டிக் கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

புளியந்தோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்கின்ற ஆதி சுரேஷ் மீது 10வருடங்களுக்கு முன்பு சில வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை 7 மணியளவில் புளியந்தோப்பு ஹை ரோடு 1 வது தெரு வழியாக சுரேஷ் வீட்டிற்கு சென்ற போது  இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments