அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு

0 2300

அ.தி.மு.க., தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கூட்டம் செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தமது அறிக்கையில் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை குறித்த விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஆனால், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தாம் இக்கூட்டத்துக்கு ஒப்புதல் ஏதும் அளிக்கவில்லை என்றும் விதியை மீறி கூட்டப்பட்டுள்ள இக்கூட்டம் சட்டத்திட்டத்திற்கு புறம்பானது என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் ஏதும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது எந்தவகையிலும் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கட்டுப்படுத்தாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments