சப்ளையர்ஸ் கடை உரிமையாளர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வீடு புகுந்து வெட்டி படுகொலை..!

0 3981
சப்ளையர்ஸ் கடை உரிமையாளர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வீடு புகுந்து வெட்டி படுகொலை..!

கள்ளக்குறிச்சி அருகே வீடு புகுந்து சப்ளையர்ஸ் கடை உரிமையாளர் வெட்டிக்கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் புது உச்சிமேடு பகுதியைச் சேர்ந்த நாரயணசாமி, விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பந்தல், பாத்திரங்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் வீடு திரும்பிய அவரை, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக் கொன்றது.

தகவலறிந்து வந்த போலீசார், கொலை நிகழ்வு குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments