ஹரித்துவார் வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் ஒன்றொடொன்று ஆக்ரோஷமாக சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரல்.!

0 1780

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் ஒன்றொடொன்று ஆக்ரோஷமாக சண்டையிடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய மாவட்ட வன அதிகாரி தீபக் சிங், யானைகளின் இந்த சண்டையை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு யானையின் தந்தம் இந்த சண்டையில் உடைந்து போனது என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். யானைகளின் இந்த மோதல் வழக்கமானது என்று கூறிய அவர், தங்களுக்குள் யார் பெரியவர் என்பதற்காகத் தான் இந்த சண்டை நடந்துள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments