விருதுநகரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது, அதிவேகமாக வந்த லாரி மோதி விபத்து.!

0 2569

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது, அதிவேகமாக வந்த லாரி மோதியது.

காரியப்பட்டியில் இருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு, ஷேர் ஆட்டோ மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

வழியில் ஒரு தனியார் கல்லூரியில் மாணவர்களை இறக்கிவிட்ட ஷேர் ஆட்டோ ஓட்டுநர், அருகிலும் மற்றொரு கல்லூரியை நோக்கி புறப்பட்ட போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி, ஆட்டோவின் பின்புறத்தில் மோதியது.

இதில் ஆட்டோவில் பயணித்த 8 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்த நிலையில், லாரி ஓட்டுநர் ஆவியூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments