ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் அமைச்சர் விஜய் சிங்லா கைது

0 2299

பஞ்சாப்பில் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப்பில் முதன்முறையாக ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த ஆம் ஆத்மி ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜய் சிங்லா, அரசு ஒப்பந்தங்களில் ஒரு சதவீதம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விஜய் சிங்லா அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதுடன், அடுத்த சில மணி நேரத்திலேயே கைதுசெய்யப்பட்டார்.

ஊழல், லஞ்சப் புகார்களை சகித்துக்கொள்ள முடியாது என்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் பக்வந்த்மான் எச்சரித்துள்ளார். இதனிடையே பஞ்சாப் முதலமைச்சரை நினைத்து பெருமைப்படுவதாகவும், அவரது நடவடிக்கை தனது கண்களில் கண்ணீரை வரவழைத்திருப்பதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மியை கட்சியை நினைத்து முழு தேசமும் பெருமை படுவதாகவும் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments