4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்

0 3787

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பிடித்துள்ளார்.

கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில், இளம் வீரர்கள் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், ருத்துராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி, ஜூன் 9ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதனிடையே, இங்கிலாந்திற்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், புஜாராவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments