சொகுசு காரில் வைத்திருந்த பணப்பையை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி வெளியீடு

0 2373

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சொகுசு காரில் வைத்திருந்த பணப்பையை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி  வெளியாகி உள்ளது.

சென்னை வியாசர்பாடி ஆர்கேபி நகரை சேர்ந்த சரத் என்பவர் குடும்பத்தினருடன் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோவில்களை பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளார். நேற்றிரவு கும்பகோணம்  சாரங்கபாணி சுவாமி கோவிலுக்கு செல்வதற்காக  கீழவீதியில்  காரை அவர் நிறுத்தியுள்ளார்.

அப்போது அங்கு வந்த ஒரு நபர் நீங்கள் எனது வாகனத்தில் மோதி விட்டு வந்ததாக கூறியதால், சரத் காரை விட்டு இறங்கி வாகனம் மோதிய தடயம் உள்ளதா என்று பார்த்துள்ளார். அதற்குள் அங்கிருந்த மற்றொரு மர்ம நபர் சரத்தின் காரில் இருந்த கைப்பையை எடுத்துச் சென்றுள்ளார்.

அந்தப் பையில்  25 ஆயிரம் ரூபாய் பணம், ஏடிஎம் கார்டு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 5பேர் கொண்ட கும்பல் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments