மனைவி என நினைத்து சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை குத்திக் கொலை செய்த நபர்..

0 3418
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், மனைவி என நினைத்து சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை குத்திக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், மனைவி என நினைத்து சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை குத்திக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கணவனை இழந்த தனலட்சுமி என்ற பெண், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவருடன் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டு திருவண்ணாமலையில் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தேவேந்திரனை பிரிந்து தனலட்சுமி ஆம்பூருக்கு வந்திருக்கிறார். தேவேந்திரன் அழைத்தும் தனலட்சுமி வர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், தனலட்சுமி என நினைத்து அருகே படுத்து உறங்கிய கௌசர் என்ற இளம்பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த கௌசர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தடுக்க முயன்ற தனலட்சுமிக்கும் கத்திக் குத்து விழுந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments