கேரளாவில், ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற 10ம் வகுப்பு மாணவி ரயில் மோதி ஆற்றில் தூக்கி வீசப்பட்டு பலி.!

0 2766

கேரளாவில், ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற 10ம் வகுப்பு மாணவி ரயில் மோதி, ஆற்றில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

பெரோக் பகுதியைச் சேர்ந்த நபாத் பதாக் என்ற மாணவி தனது ஆண் நண்பர் இசாமுடன் சேர்ந்து கோழிக்கோட்டில் ஆற்றின் நடுவே செல்லும் பரோக் ரயில்வே பாலத்தின் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

செல்பி மோகத்தில் அவ்வழியாக மங்களூரு - கோவை விரைவு ரயில் வருவதை இருவரும் கவனிக்காத நிலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் ரயிலின் பக்கவாட்டு பகுதி மோதி ஆளுக்கொரு திசையில் விழுந்துள்ளனர். இதில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட மாணவி மாணவி நபாத் பதாக் பரிதாபமாக உயிரிழந்தார்.

தண்டவாளத்திற்கு அருகே விழுந்த மாணவன் இசாம், கை, கால்களில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments