மாநிலங்களவைத் தேர்தல் - திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!

0 6990
மாநிலங்களவைத் தேர்தல் - திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களுக்கு வருகிற ஜூன் மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கான 4 இடங்களில் ஒரு இடம் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

மற்ற 3 இடங்களில் தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும் திமுக அறிவித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் விவரம் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments