இலங்கைக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தல்!

0 2137

அசாதாரண சூழல் நிலவுவதால் இலங்கைக்கு தேவையின்றி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என சிங்கப்பூர் மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இலங்கையில் வசிக்கும் சிங்கப்பூர் மக்கள் போராட்டம் நடக்கும் இடங்களுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கவும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனிடையே, இலங்கைக்கு பயணம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறையும் தன் நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் நிலவும் சூழல் கவலையை எழுப்புவதாகவும், பாதுகாப்பு காரணமாக இலங்கைக்கு பயணம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கையில் வசிக்கும் ஆஸ்திரேலியர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்லும் போது அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட்டை தவறாது எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments