பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து.. கட்டுக்கடங்காமல் எரிந்த தீயை போராடி அணைத்த தீயணைப்புத் துறையினர்..!

0 867
பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து.. கட்டுக்கடங்காமல் எரிந்த தீயை போராடி அணைத்த தீயணைப்புத் துறையினர்..!

சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே பழைய பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ மேலும் 3 குடோன்களுக்கு பரவியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை விண்ணை முட்ட எழுந்தது. மலையம்பாக்கம் பகுதியில் அந்த கிடங்கில் இன்று காலை திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது.

அதில் தீ மளமளவென குடோன் கட்டிடம் முழுவதும் பரவி, கொளுந்துவிட்டு எரிந்ததோடு, அருகில் இருந்த 3 குடோன்களுக்கும் பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.உரிய அனுமதி இல்லாமல் குடியிருப்புகளுக்கு மத்தியில் குடோன்கள் செயல்பட்டு வருவதாக அங்குள்ள பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments