இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை பிரதான வாயிலில் காலிஸ்தான் கொடி கட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு

0 2510

இமாச்சலப் பிரதேசச் சட்டமன்றத்தின் வாயிற்கதவு, மதிற்சுவர் ஆகியவற்றில் காலிஸ்தான் கொடிகளைக் கட்டியது குறித்து விசாரித்துக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

தர்மசாலாவில் உள்ள சட்டமன்றக் கட்டடத்தின் வாயிற்கதவு, மதில் ஆகியவற்றில் காலிஸ்தான் கொடிகள் கட்டியதை அறிந்த காவல்துறையினர் அவற்றை உடனடியாக அகற்றினர்.

பஞ்சாபில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் நேற்றிரவு அல்லது இன்று அதிகாலையில் காலிஸ்தான் கொடிகளைக் கட்டியிருக்கக் கூடும் எனக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இந்தச் செயலைக் கண்டித்துள்ள மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments