இந்த குடிகாரனை காப்பாற்றவா நம் ராணுவம் போராடியது..? மலை இடுக்கில் சிக்கியவர் ரகளை..! குடி போதையில் வீதியில் உருண்ட வீடியோ..!

0 10925
இந்த குடிகாரனை காப்பாற்றவா நம் ராணுவம் போராடியது..? மலை இடுக்கில் சிக்கியவர் ரகளை..! குடி போதையில் வீதியில் உருண்ட வீடியோ..!

கேரளாவின் மலம்புழா மலைப்பகுதிக்கு டிரெக்கிங் சென்ற போது மலை இடுக்கில் சிக்கி, இந்திய ராணுவத்தால் பல மணி நேரம் போராடி உயிரோடு மீட்கப்பட்ட இளைஞர், குடிபோதையில் நண்பர்களுடன் ரகளை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை பெற்று உள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த செராடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் கடந்த பிப்ரவரி மாதம் மலம்புலா மலை பகுதியில் டிரெக்கிங் சென்ற போது தவறி விழுந்து அங்குள்ள மலை இடுக்கில் சிக்கிக் கொண்டார். தகவல் அறிந்து விரைந்து சென்ற இந்திய ராணுவத்தினர் ஹெலிகாப்டரில் சென்று தங்கள் உயிரை பணயம் வைத்து பல மணி நேரம் போராடி இவரை உயிரோடு மீட்டனர்

தன்னை மீட்டு காப்பாற்றிய இராணுவ வீரர்களுக்கு முத்தமழை எல்லாம் பொழிந்து ஒரே நாளில் தேசிய அளவில் பிரபலமானார் டிரெக்கர் பாபு..!

இந்த நிலையில் இந்த நபரையா இந்திய ராணுவம் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியது என்று கேட்கும் அளவுக்கு மது போதையில் அவர் செய்த ரகளைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது

இந்த வீடியோவில் டிரெக்கர் பாபு, போதை தலைக்கேறி தனது நண்பர்கள் மற்றும் வீட்டாரை ஆபாச வார்த்தைகளால் திட்டுவதும், தான் சாகனும் என்று கூறி வெறிப்பிடித்த விலங்கு போல அட்டகாசம் செய்வதும், போதையை தெளியவைக்க நண்பர்கள் தலையில் தண்ணீர் ஊற்றுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன

பெற்ற தாயை ஆபாசமாக பேசி அடிக்க பாய்ந்தது ரகளை செய்யும் குடிகார பாபுவை கம்பால் ரெண்டு சாத்து விடும் காட்சிகளும் இடம் பெற்று உள்ளன

இப்படிப்பட்ட பகல் குடிகாரனையா இந்திய ராணுவம் ஹெலிகாப்டர் எல்லாம் கொண்டு வந்து காப்பாற்றினார்கள் ? என்று நெட்டிசன்கள் பாபுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நண்பர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் ஓசியில் குடித்த மதுவால் இது போன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments