உயிரிழந்தவர்களின் பெயரில் போலியான ஆவணங்கள் தயார் செய்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.59 கோடி மோசடி..!

0 1460
உயிரிழந்தவர்களின் பெயரில் போலியான ஆவணங்கள் தயார் செய்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.59 கோடி மோசடி..!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் போலியான ஆவணங்கள் தயார் செய்து, ஒரு கோடியே 59 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் முறைக்கேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க செயலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெலாந்துறை கிராமத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் விவசாய கடன், விவசாயி இல்லாத நபர் மீது போலியான ஆவணங்கள் தயார் செய்து அதில் விவசாய கடன், தங்க நகைகள் இல்லாமல் கடன்கள் பெற்றதாக புகார் எழுந்தது.

சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில் முறைகேட்டில் ஈடுபட்ட 20 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கூட்டுறவு சங்க செயலாளர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments