குவாட்டர் ரூ.200 க்கு விற்கப்படுகிறது.. அமைச்சர் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் குடிமகன் கேள்வியால் சலசலப்பு..

0 4064
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மது பிரியர் ஒருவர் குவாட்டர் ஒன்று 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக புகாரளித்ததால் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மது பிரியர் ஒருவர் குவாட்டர் ஒன்று 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக புகாரளித்ததால் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

காவாகுளம் கிராமத்தில், அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கிருந்தவர்களின் குறைகளை அமைச்சர் கேட்ட போது, ஒருவர் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

குவாட்டர் ஒன்று 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கோபப்பட்ட அந்த குடிமகனை காவல் துறையினரும், கட்சி நிர்வாகிகளும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments