ஈரோட்டில் வீட்டின் வாசலில் உறங்கிக் கொண்டிருந்த விவசாயியை வெட்டிக் கொலை செய்து 25 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பல்.!

ஈரோட்டில், வீட்டின் வாசலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த விவசாயியை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல், 25 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னிமலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் துரைசாமி- ஜெயமணி தம்பதி.
நேற்றிரவு துரைசாமியும் ஜெயமணியும் வீட்டிற்குள் புழுக்கமாக இருந்ததால் வீட்டிற்கு வெளியே ஆளுக்கொரு கட்டிலில் படுத்து உறங்கியுள்ளனர்.
அதிகாலையில் பால்காரர் வந்து பார்த்த போது முகத்தில் வெட்டுக் காயங்களுடன் துரைசாமி சடலமாக கிடந்ததாகவும் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் ஜெயமணி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
Comments