இளம்பெண்ணின் ஏழரை சவரன் தங்க தாலி செயினை பறித்து விட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள்

0 2695

மதுரை தெப்பக்குளம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் இருந்து தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

திருச்சி குமரன் நகரை சேர்ந்த வெங்கடேஷ்வரி என்பவர் மதுரை தெப்பக்குளம் அருகே காமராஜர் சாலையில் தனது தம்பியுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அருகில் யதார்த்தமாக நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென வெங்கடேஷ்வரி அணிந்திருந்த ஏழரை சவரன் தங்க தாலி செயினை பறித்து விட்டு அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபருடன் தப்பி சென்று விட்டார்.

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments